Pages

Sunday, January 1, 2012

பாகிஸ்தானில் இந்துப் பெண் இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம்: அவரது பெற்றோர் போலீசில் புகார்!

Sunday, January, 01,2012
கராச்சி:பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர் இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டிருக்கிறார் என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் பார்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மதமாற்றத்துக்குப் பிறகு ஆயிஷா என அவருக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லியாரி பகுதியில் இந்க சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த பகுதியில் இதுபோல நடப்பது இது 18-வது முறையாகும். மதமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிறுமிகள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பார்தியின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரில், பார்தியின் திருமணச் சான்றிதழில் அவருக்கு 18 வயது எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தனது மகளுக்கு 15 வயதே ஆவதாகத் தெரிவித்துள்ளார்.

தனது மகளை கடத்திச் சென்று, அபித் என்பவர் திருமணம் செய்துள்ளார். அபித் இந்த பகுதியில் தேடப்பட்டு வரும் நபர். மேலும் போதைப் பொருள் பயன்படுத்துபவர். அவரது பார்வை அனைத்து பெண்களின் மீதும் இருக்கும் என பார்தியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பார்தி கூறுகையில், நான் அபிதை விரும்பினேன். மார்க்கெட்டுக்கு சென்று அவரை சந்தித்தேன். அங்கிருந்து நாங்கள் ஓடிப்போகத் திட்டமிட்டோம் என்றார்.

இதுகுறித்து திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பார்தி அபிதின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரை விற்றுவிடுவார்கள் அல்லது கொன்றுவிடுவார்கள். அவரைச் சந்திக்க எங்களுக்கு அனுமதி அளிக்க உறுதிமொழி தரப்பட வேண்டும் என பார்தியின் பெற்றோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment