Pages

Thursday, January 5, 2012

ராமேஸ்வரத்தை சேர்ந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்!

Thursday,January 05, 2012
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் போஸ் என்பவர் படகில், ஜன., 2ம் தேதி, கோவிந்தராஜ், நாதன், குமார், ஆறுமுகம் ஆகியோர் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அடுத்த நாள் இவர்கள் கரை திரும்பவில்லை. இவர்களைத் தேடி மீனவர்கள் சென்றபோது, நான்கு பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுடன் இழுத்துச் சென்றதை பார்த்தனர்.
நடுக்கடலில் படகு பழுதால், திசைமாறி சென்றதாகவும், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்திருப்பதாகவும், திரும்பி வந்த மீனவர்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் மீன் வளத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment