Wednesday, January 4, 2012

மட்டக்களப்பு ஏறாவூரில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையீடு!

Wednesday,January,04,2012
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த சிலரே சிறுமியைக் கடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறுமியின் தந்தை பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

செங்கலடிப் பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியெனவும் அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன் மேலதிக தீவிர விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர.

No comments:

Post a Comment