Thursday,January 05, 2012வருசநாடு:வருசநாடு மலைப்பகுதியில் நக்சல்கள் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை போலீசார் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியானது. அதன்பேரில் விருதுநகர் அதிரடிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மர்மநபர்கள், தேனி மாவட்டம் வருசநாடு அருகே காமராஜபுரம், கொடிக்குளம், ஓயாம்பாறை, பிளவக்கல் மலைப்பகுதிகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, தேனி மாவட்ட அதிரடிப்படையினர், வனத்துறையினர் நேற்று காலை 6 மணிக்கு வருசநாடு பஞ்சம்தாங்கி மலைப்பகுதி, பவள நகர் மலைப்பகுதி, நந்தனார்புரம், எறும்புச்சுனை, முறுக்கோடை மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment