Pages

Thursday, January 5, 2012

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவான நிலையில் காணப்படுகின்றது:பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Thursday,January 05, 2012
இலங்கை::புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவான நிலையில் காணப்படுகின்றது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலிகளின் முன்னாள் போராளிகள், புலி ஆதரவாளர்கள், புலி அனுதாபிகள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பல்வேறு நாடுகளில் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்டமைப்பில் இணைந்து கொண்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஆயுததாரிகள் என பல்வேறு போர்வையில் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தொழில்சார் நிபுணர்கள் ஒன்றிய ஒன்றுகூடல் வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலிகளின் சர்வதேச வலையமைப்பிடம் பாரியளவில் நிதி காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளின் வலுவான சக்திகளுடன் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சில சர்வதேச ஊடகங்கள் புலிகளின் பிரச்சார நிறுவனங்களாக மாற்றமடைந்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக செனல்4 மற்றும் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்ற ஊடக நிறுவனங்கள் ஒருபக்கச் சார்பாக புலிகளுக்காக பிரச்சாரங்களில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை சமாதானத்தின் அனுகூலங்களை அனுபவித்து வரும் நாடுகளில் ஒன்றாக திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசியாவின் முதனிலை நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றும் பணியில் தொழில்சார் நிபுணர்களுக்கு விசேட பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இனக் கலவரத்தை ஏற்படுத்தவும், ஸ்திரத்தன்மையை சீர் குலைக்கவும் தொடர்ந்தும் சில சக்திகள் முனைப்புக் காட்டி வருகின்றனர் என்பதனை தொழில்சார் நிபுணர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். எதிரிகளின் சவால்களை எதிர்நோக்க சகலரினதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் சவால்களுக்கு மத்தியில் வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை சீர்குலைப்பதற்கு சில தரப்பினர் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ள அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் சில நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக தமிழ்ப் புலம்பெயர் மக்கள் செறிந்து வாழ்ந்து வரும் நாடுகளில் இவ்வாறான அரசியல் இடம்பெற்று வருகின்றமை வழமையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் உள்ளக அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்குலக நாடுகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் இவ்வாறு புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக சில தரப்பினர் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தியாகங்களைச் செய்து ஈட்டப்பட்ட சமாதானத்தை சீர்குலைக்கும் சக்திகள் குறித்து நாம் வழி;ப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பூவியியல் ரீதியான அரசியல் கள நிலவரங்களை தொழில்சார் நிபுணர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாகவும் சில நாடுகளில் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகின் பல நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுகளைப் போன்றே சீனா இலங்கையுடனும் உறவுகளைப் பேணி வருவதாகவும் சில தரப்பினர் இதனைப் பிழையாக விளங்கிக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமண்ற உறுப்பினரான கௌரவ ஜாம்ஸ் வார்டன் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமண்ற உறுப்பினரும், ஐக்கிய இராச்சியம் – இலங்கை பாராளுமன்றக் குழு உறுப்பினருமான கௌரவ ஜாம்ஸ் வார்டன், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷவை நேற்று (ஜன.03) மாலை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளருக்கும், கௌரவ ஜாம்ஸ் வார்டனுக்கும் இடையிலான இருதரப்பு நலன்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது.

இச்சந்திப்பில், திரு.வார்டனின் அரசியல் ஆலோசகர் திரு.சரிஸ் டுகன் மற்றும் இரு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment