Wednesday, January 4, 2012

புலிகளுக்கு எதிரான போராட்டங்களின் போது யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள்அமைப்பு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்:இலங்கை!

Wednesday,January,04,2012
இலங்கை::யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள்அமைப்பு பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை கோரியுள்ளது.

புலிகளுக்கு எதிரான போராட்டங்களின் போது யுத்தக்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் காணப்படும் ஆதாரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் காணப்படும் எழுத்து
மூல மற்றும்வாய் மொழிமூல ஆதாரங்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு இந்தத் தடை நீடித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் ஏதேனும் ஆதாரங்கள் காணப்பட்டால் அவை இலங்கையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், அதன் மூலம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளை சீராக மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் தடை இலங்கை விசாரணைகளுக்கு முட்டுக்கட்டையாக அமையக் கூடாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்கில் யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முனைப்பு காட்டுவோர் இந்த ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினரிடம் காணப்படும் ஆதாரங்களை பகிரங்கப்படுத்தக் கூடாது என இருபது ஆண்டுகால தடை விதிக்கப்பட்டுள்ளது.

எழுத்து மூல மற்றும் வாய்மொழிமூல ஆவணங்கள் மிகவும் இரகசியமானவைஎனவும், அவை எதிர்கால விசாரணைகளுக்கு தேவைப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுதெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment