Wednesday,January,04,2012இலங்கை::அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆவது இடத்தில் தடம் பதித்துள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், எனது அமைச்சின் கீழ் கடந்த வருட ஏற்றுமதி வருமானம் 10 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் இது பொருளாதார வளர்ச்சி வேகத்தில் 8.4 சதவீதமாகும் என்றும் கூறினார்.
புதுவருடத்தில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாரத்தின் முதலாவது தினமான வைபமொன்றில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையில் அரச நியமனங்களைச் செய்ய விடாமல் அரச சேவையினை வலுவிழக்கச் செய்யும் பணிகள் இடம்பெற்ற காலகட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அரசாங்கத்தைப் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் அரச சேவையினை வலுப்படுத்தியதுடன் நாட்டின் அபிவிருத்திச் சக்கரத்தில் அரச அதிகாரிகளின் பங்கினை உறுதிப்படுத்தினார்.
மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் இலங்கைத் தேசம் ஆசியாவின் ஆச்சரியம் மிகுந்ததாக மாறுவதற்கு எதனைக் குறிப்பிட்டாரோ அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment