Pages

Thursday, January 5, 2012

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள்:சர்வமத பேரவை!

Thursday,January 05, 2012
இலங்கை::கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையின் ஊடாக முன்வைத்துள்ள பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வமத பேரவை வலியுறுத்தியுள்ளது. மேலும் இனப்பிரச்சினைக்கு அனைத்து மக்களும் உணரக்கூடிய மற்றும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் விரைவாக முன்வைக்கவேண்டும் என்றும் சர்வமத பேரவை தெரிவித்துள்ளது.

நாட்டில் யுத்தம் முடிந்துவிட்டாலும் யுத்தத்துக்கான காரணங்கள் இன்னும் உள்ளன. அவற்றை விரைவாகத் தீர்த்து வைக்கவேண்டும். அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். 18 ஆவது திருத்தச் சட்டம் வந்ததன் பின்னர் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை இல்லாமல் போய்விட்டது என்றும் பேரவையின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கொழும்பில் இன்று சர்வமத பேரவை நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அதன் பிரதிநிதிகளான மதத் தலைவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் தலைவர்கள் சர்வமத பேரவையின் சார்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.

No comments:

Post a Comment