Tuesday, January 3, 2012

எஸ்.எம். கிருஷ்ணாவின் வருகைக்கு அரசாங்கம் அனுமதியளிக்கக் கூடாது - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் வருகைக்கு அரசாங்கம் அனுமதியளிக்கக் கூடாது. இலங்கையில் இனவாதத்தை ஏற்படுத்தி மீண்டும் தமிழ் மக்களை அழிவிற்குள் தள்ளிவிடவே இந்தியா முயற்சிக்கின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் அழிவிற்கும் பின்னடைவுகளுக்கும் இந்தியாவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புமே பொறுப்புக் கூற வேண்டும் என அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் பொதுச் செயலாளருமான வசந்த பண்டார, இந்தியாவின் வெளியுறவு அமைச்சரான எஸ்.எம். கிருஷ்ணா அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ளார். இவ ர் வருகையின் பின்னணியில் இலங்கைக்கு ஆபத்தான விடயங்களே உள்ளன.

வடக்கு தொடருந்து பாதை அமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக என கிருஷ்ணா இலங்கை வந்தாலும் இந்தியாவின் நோக்கம் அதுவல்ல. நாட்டில் இனவாதப் பேச்சுக்களை ஆரம்பித்து மீண்டும் தமிழ், சிங்கள உறவை முறிப்பதே குறிக்கோளாகும். எனவே, அரசாங்கம் இந்தியா விடயத் தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிகாரப் பகிர்வில் பிடிவாதமாக உள்ளது.இதற்கு துணையாகவே இந்தியா எஸ்.எம்.கிருஷ்ணாவை இலங்கைக்கு அனுப்புகின்றது. தமிழ் மக்கள் கடந்த முப்பதாண்டுக் காலமாக பெரும் அவலங்களை சந்தித்து வந்தனர். தற்போது யுத்தம் முடிவடைந்து 2 வருடங்களை தாண்டியுள்ள நிலையில் முன்னைய கால கட்டத்திற்கு அம்மக்களை தள்ளிவிடவே கூட்டமைப்பு மற்றும் இந்தியா முயற்சிக்கின்றன.

உள்நாட்டு விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டை இலங்கை ஒருபோதும் அனு மதிக்காது. அதேபோன்று அதிகாரப் பகிர்வை இலங்கையில் நடைறைப்படுத்தவும் முடியாது. ஏனெனில் தமிழ் மக்களுக்கு என்று தனி அதிகாரங்கள் கொடுக்கும்போது ஏனைய இனங்களுக்கு பாதிப்பாக அமைந்துவிடும் என வசந்த பண்டார கூறியுள்ளார்.

No comments:

Post a Comment