Pages

Wednesday, January 4, 2012

ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டு வீசி அழிப்போம் : அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் எச்சரிக்கை!

Wednesday,January,04,2012
வாஷிங்டன்:ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டு வீசி அழிப்போம் என்று அமெரிக்க குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ரிக் சன்டோரம் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி வேட்பாளர் ரிக் சன்டோரம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘Ôநான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி அழிப்பேன். எனது காண்காணிப்பில் ஈரான் எந்த அணு ஆயுதத்தையும் தயாரிக்க முடியாதுÕÕ என்றார். ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஐ.நா. உள்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. எனினும், ஆயுதங்கள் தயாரிக்கவில்லை. மின் உற்பத்திக்காக அணுசக்தி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று ஈரான் திட்டவட்டமாக கூறிவிட்டது. அத்துடன், யுரேனியத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட எரிபொருளையும் நேற்றுமுன்தினம் அணுஉலையில் செலுத்தி பரிசோதனையும் செய்துவிட்டது.

No comments:

Post a Comment