Pages

Tuesday, January 3, 2012

புலிகளின் தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை–தயான் ஜயதிலக்க!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::புலிகளினால் வெளியிடப்பட்டள்ள தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கவில்லை என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அரசாங்கமோ அல்லது அந்நாட்டு தபால் திணைக்களமோ புலிகளின் சின்னங்கள் அடங்கிய தபால் முத்திரைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் உருவம் பொறித்த தபால் முத்திரைகள் வெளியிடப்படவில்லை என பிரான்ஸ் தபால் திணைக்களம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸின் அரசாங்க தபால் அலுவலகங்களில் குறித்த தபால் முத்திரைகள் விற்பனை செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், பிரான்ஸ் நாட்டில் தனிப்பட்ட நபர்கள் சுய விருப்பின் அடிப்படையில் தாங்களாகவே தபால் முத்திரைகளை வடிவமைத்து வெளியிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறே பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியிடப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் முத்திரை வெளியிடப்பட்ட சம்பவம் குறித்து பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சிடம் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக, தூதுவர் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புலிகளினால் தபால் முத்திரை பிரசூரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்த வேண்டுமென வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் சரத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் உண்மையென்றால் பிரான்ஸ் அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் தொடர்புகள் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment