Pages

Wednesday, January 4, 2012

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 86 பேர் பாலியல்!

Wednesday,January,04,2012
இலங்கை::கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 86 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 77 பேர் சிறுவர்கள் எனவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதானது மிகவும் மோசமான குற்றச் செயலாகும். அதிலும் சிறுவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படுவதானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இவ்வாறான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு செயற்பட்டுவருகின்றது.

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். அத்தோடு சிறுவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி அவர்களைப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment