Pages

Wednesday, January 4, 2012

மத்திய பிரதேசத்தில் பசு வதைக்கு 7 ஆண்டு ஜெயில் சட்டதிருத்தத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

Wednesday,January,04,2012
போபால்:மத்திய பிரதேச மாநிலத்தில் பசு வதை செய்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்துள்ளார். ராஜஸ்தான், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பசு வதை தடை சட்டம் அமலில் உள்ளது. ராஜஸ்தானில் பசு வதை செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். குஜராத்தில் அண்மையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை 7 ஆண்டாக உயர்த்தப்பட்டது. இந்த வரிசையில் மத்தியபிரதேச மாநிலத்திலும் பசு வதைக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பழைய சட்டப்படி பசு வதை செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது இந்த தண்டனை 7 ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி பசு மற்றும் கன்றுக்குட்டி கறியை விற்பனை செய்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் அதை சாப்பிடுபவர்களுக்கும் தண்டனை அளிக்கப்படும். மேலும் இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை கோர்ட்டில் நிருபிக்க வேண்டும். வழக்கமாக போலீசார்தான் குற்றத்தை நிருபிக்க வேண்டும். இந்த சட்டதிருத்தத்துக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று ஒப்புதல் அளித்தார்.

No comments:

Post a Comment