Pages

Tuesday, January 3, 2012

இலங்கை சிறையிலுள்ள தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கும் 16ம் தேதிவரை காவலை நீட்டித்து யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது!

Tuesday, January 03, 2012 12
மண்டபம்: இலங்கை சிறையிலுள்ள தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கும் 16ம் தேதிவரை காவலை நீட்டித்து யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளாடுவின் விசைப்படகில் மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், லாங்லெத், பிரசாத் ஆகிய 5 பேர் நவம்பர் 28ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அன்றிரவு கச்சத்தீவு அருகே அவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். போலீசாரிடம் 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை, காங்கேசன் துறை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு 5 மீனவர்களும் யாழ்ப்பாணம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் கடந்த சில வாரங்களாக அடைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களையும், படகையும் விடுவிக்கக் கோரியும், போதைப்பொருள் கடத்தியதாக பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.இதே கோரிக்கை யை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரிடம் மீனவர் நலச் சங்கப்பிரதிநிதிகள் மனுக்கொடுத்தனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையிலுள்ள தங்கச்சிமடம் மீனவர்களை அங்குள்ள கோர்ட்டில், போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர்.
அவர்களுக்கு ஜனவரி 16ம் தேதிவரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். தங்கச்சிமடம் மீனவர்களுக்கு 2வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நவ.28ம் தேதி கச்சத்தீவு அருகே 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவு.
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைப்பு.
நீதிமன்றத்தில் 5 மீனவர்களுக் கும் ஜன.16 வரை காவல் நீட்டிப்பட்டது.

No comments:

Post a Comment