Pages

Sunday, January 1, 2012

எண்ணூரில் ரூ3,600 கோடியில் புதிய அனல் மின்நிலையம் :முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

Sunday, January, 01,2012
சென்னை:எண்ணூரில் ரூ.3,600 கோடி செலவில் புதிய அனல் மின் நிலையம் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: மின்சாரம் தங்கு தடையின்றி அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்காக தமிழக அரசு பல உத்திகளை மேற்கொண்டு வருகிறது. மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து முடிக்கவும், புதிய மின் உற்பத்தி திட்டங்களை தொடங்கவும், மின்பகிர்வு கட்டமைப்புகளை பிரிக்கவும், மின் இழப்பை தடுக்கும் பொருட்டு பகிர்மான அமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எண்ணூரில் தற்போதுள்ள அனல் மின்நிலையத்திற்கு மாற்றாக ஒரு புதிய அனல் மின்நிலையத்தை நிறுவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எண்ணூரில் 5 அலகுகள் கொண்ட, மொத்தம் 450 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம், 40 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு செயல்பட்டு வரு கிறது. இந்நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், இங்குள்ள இயந்திரங்கள் செயலிழந்து வருகின்றன. இதனால் இந்த அனல் மின்நிலையம் முழு உற்பத்தித் திறனுடன் செயல்பட இயலவில்லை. எனவே, எண்ணூரில் 5 அலகுகள் கொண்ட அனல் மின் நிலையத்தில் உள்ள பழைய மின் உற்பத்தி இயந்திரங்களை அகற்றி விட்டு, அதே இடத்தில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.3,600 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் 600 மெகாவாட் திறனுள்ள மாற்று எண்ணூர் அனல் மின்நிலையம்Õ அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய எண்ணூர் அனல் மின்நிலையம், 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பட துவங்கும்.

No comments:

Post a Comment