Pages

Tuesday, January 3, 2012

இலங்கை கடற்படையினரால் கடந்த இருவார காலப்பகுதிக்குள் மீட்கப்பட்டிருக்கும் 35 இந்திய மீனவர்கள் விசாரணைகள் முடிவடைந்ததும் தாயகம் அனுப்ப ஏற்பாடு!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::இலங்கை கடற்படையினரால் கடந்த இருவார காலப்பகுதிக்குள் மீட்கப்பட்டி ருக்கும் 35 இந்திய மீனவர்களது வழக்கு விசாரணைகள் முடிவடைந்ததும் முறையே அவர்கள் தமது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்ப டுவரென கடற்படை பேச்சாளர் கமாண்டர் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

மீன்பிடித்தலுக்கான பயிற்சியின் போது படகுகள் சேதமாகிய நிலையில் உயிருக்குப் போராடி தத்தளித்த 29 இந்திய மீனவர் களையும் ‘தானே’ சூறாவாளி காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் கரை யொதுங்கியிருந்த ஆறு இந்திய மீனவர் களையும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை முன்னெடுத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 35 இந்திய மீனவர்களும் மேலதிக விசா ரணைகளுக்காக அவர்கள் மீட்கப்பட்டுள்ள கடல் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட் டுள்ளனர். இவர்களது வழக்கு விசாரணைகள் முடிவடைந்ததும் இம் மீனவர்கள் முறையே அவர்களது சொந்த நாட்டிடம் ஒப்படைக்கப்படுவரெனவும் கடற்படை பேச்சாளர் கூறினார்.

அதேவேளை, ‘தானே’ சூறாவளி காரணமாக காணாமற்போன 21 இந்திய மீனவர்களை தேடிக் கண்டுபிடித்து தருமாறு இந்திய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இதுவரை ஆறு மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்களையும் உயிருடன் மீட் கலாமென்ற நம்பிக்கையில் வடக்கு, கிழக்கு, வடமத்திய கடற்படை முகாம்களைச் சேர்ந்த கடற்படையினர் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தொடர்ந்தும் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment