Pages

Thursday, January 5, 2012

2010ம் ஆண்டு மினுவங்கொட மாதம்மன பகுதியில் ஹொட்டேல் ஒன்றின் முகாமையாளர் உட்பட மூவரை சுட்டுக்கொன்ற சந்தேகநபர் கைது!

Thursday,January 05, 2012
இலங்கை::2010ம் ஆண்டு மினுவங்கொட மாதம்மன பகுதியில் ஹொட்டேல் ஒன்றின் முகாமையாளர் உட்பட மூவரை சுட்டுக்கொன்ற சந்தேகநபர் கைது:-

மினுவங்கொட மாதம்மன பகுதியில் ஹொட்டேல் ஒன்றின் முகாமையாளர் உட்பட மூவரை சுட்டுக்கொன்ற சந்தேக நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

2010ம் ஆண்டு நவம்பர் 4ம் திகதி இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்கொலைக்கு பயன்படுத்திய 9 மி.மீ ரக பிஸ்டல் மற்றும் 2 ரவைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 320 கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 35 வயதுடைய நபரொருவர் சட்டவிரோதமாக 320 கையடக்கத் தொலைபேசிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த நபர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்திணைக்கள அதிகாரிகள் அவரது பயணப்பையை சோதனை செய்தபோது கையடக்கத் தொலைபேசிகள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 22 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment