Pages

Sunday, December 4, 2011

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குச் தங்கக் கட்டிகளை கொண்டு செல்ல முற்பட்ட கணவன்-மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Sunday, December 04, 2011
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்கக் கட்டிகளை கொண்டு செல்ல முற்பட்ட கணவன்-மனைவியை கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக எமது விமான நிலையச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்தியாவுக்குச் செல்லத் தயாராகவிருந்த மேற்படி இருவர் மீதும் சந்தேகம் கொண்ட விமான நிலையச் சுங்க அதிகாரிகள் அவர்களுடைய கைப்பையைச் சோதனையிட்ட போது அதில் 29 இலட்சம் ரூபா பெறுமதியான 63.5 கிராம் நிறையுடைய தங்கக் கட்டிகள் இருந்துள்ளன.

இவ்விருவரும் கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருவரையும் விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் குறித்த தங்கக் கட்டிகளை அரசுடைமை ஆக்கியதுடன் இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment