Pages

Wednesday, December 7, 2011

புலிகளின் முக்கிய ஆயுதமுகவராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யின் பிரதான சகாவான ஐயா என்பவரை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!

Wednesday,December,07,2011
புலிகளின் முக்கிய ஆயுத முகவராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யின் பிரதான சகாவான ஐயா என்பவரை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐயா என்பவரைக் கண்ட இடத்தில் கைது செய்யுமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் தீபாலி விஜேசுந்தரவினால் நேற்று செவ்வாய்கிழமை (06.12.2011) இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடிரியுமை பெற்றுக் கொண்ட ஐயா ஓரு கணக்காய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாத காரணத்தினால் அவர் மீது இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் புலிகளுக்காக ஐயா நிதி திரட்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment