Pages

Thursday, December 8, 2011

இலங்கையில் இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகளுக்னென-சீனா இயந்திரங்கள் நன்கொடை!

Thursday,December,08,2011
இலங்கை:சீனா அரசாங்கமானது, இலங்கையில் இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகளுக்னென 115 அமெரிக்க டொலர் பெறுமதியான இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்டுவரும், மாகாண வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை மேற்கொள்ளவதற்கு இவ் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மாகாண வீதி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நாடுபூராகவும் வீதி வலையமைப்பை ஏற்படுத்தும் திட்டமானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வழிகாட்டலின் கீழ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவினால் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் 3740 கிலோ மீற்றர் வரையான வீதி, காப்பட் வீதியாக மாற்றப்பட்டவுள்ளது. இதற்கு மொத்தமாக 22,000 மில்லியன் ரூபா செலவாகுமென கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் காபட் வீதிகள், நடபாதை மேம்பாடு. பாலங்கள் வடிகாலமைப்புத் திட்டங்கள் போன்றனவும் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் நாடுபூராகவும் உள்ள நீர்ப்பாசன செயற்திட்டங்களை புனர்நிர்மான செய்து அபிவிருத்தி செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment