Pages

Thursday, December 8, 2011

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு போட்டியிடக் கரு ஜயசூரியவுக்கு தகுதியில்லை-ஜோன் அமரதுங்க!

Thursday,December,08,2011
இலங்கை:ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு போட்டியிடக் கரு ஜயசூரியவுக்கு தகுதியில்லை. எனவே கரு ஜயசூரிய போட்டியிலிருந்து விலகிக்கொள்வதே நாகரிகமானது என்று ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினரும் எம்.பியுமான ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இன்று பொரளையில் ஜோன் அமரதுங்கவின் இல்லத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2007 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து 16 பேருடன் ஆளும் தரப்புக்குத் தாவி ஐ.தே.கவுக்கு பாரிய துரோகம் இழைத்தார். மீண்டும் அவர் இணைகையில் கூட்டிச்சென்றவர்களில் ஒருவரைக்கூட அழைத்துவர முடியவில்லை. அதுமட்டுமன்றி கட்சியின் செயற்குழுவுக்கும் தலைமைத்துவத்துக்கும் அளித்த வாக்குறுதிகளையும் கரு ஜயசூரிய மீறியுள்ளார்" என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

No comments:

Post a Comment