Pages

Friday, December 9, 2011

கண்டி, போகம்பறை சிறைச்சாலைக்குள் ஹெரொய்ன் போதைப் பொருளைக் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது!

Friday, December 09, 2011
கண்டி, போகம்பறை சிறைச்சாலைக்குள் ஹெரொய்ன் போதைப் பொருளைக் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பால்மா பக்கெற் ஒன்றினுள் மிகவும் சூட்சமமான முறையில் மறைத்து, சந்தேக நபர் சிறைச்சாலைக்குள் போதைப் பொருளை கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாக மத்திய மாகாண பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபரை சோதனையிட்டபோது பால்மா பக்கெற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரொய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மாகாண பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடமிருந்து 3.9 கிராம் நிறையுடைய ஹெரொய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் கலேவெல பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment