Pages

Wednesday, December 7, 2011

யாழ்.குடாநாட்டிற்கு தொடர்ச்சியாகச் செல்லும் ராஜதந்திரிகள்!

Wednesday,December,07,2011
யாழ்.குடாநாட்டிற்கு தொடர்ந்தும் படையெடுத்து செல்லும் ராஜதந்திரிகள் மத்தியில் நோர்வே தூதரும் யாழ் சென்றுள்ளார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்துள்ள நோர்வே தூதரும் அவரது குழுவினரும் அரச அதிபர் இமெல்டா சுகுமாரை சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டனர். இதேவேளை குடாநாட்டின் பல்வேறு தரப்புகளையும் குழுவினர் சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளனர். கடந்த வாரம் பிரிட்டன் துணை தூதர் உள்ளிட்ட குழுவினர் இதே போன்று குடாநாட்டிற்கு சென்று பல்வேறு தரப்பகளையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர். உண்மையான கள யதார்த்தத்தினை கண்டுகொள்ளவே இந்த விஜயங்கள் தொடர்வதாக நம்பப்படுகின்றது. குறிப்பாக மீள்குடியமர்வு முன்னாள் போராளிகளது நிலை என்பவை பற்றியும் குழுவினர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

No comments:

Post a Comment