Pages

Friday, December 9, 2011

மொனராகலயில் மூவரைக் கொன்றவர் முன்னாள் பொலிஸ் கான்ஸ்ரபிள்!

Friday, December 09, 2011
இலங்கை:மொனராகல, ஹம்பேகமுவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்ரபிள் என்பது தெரியவந்துள்ளது.

இவர் கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி பொலிஸ் சேவையில் இருந்து விலகிக்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையிலிருந்து காணாமற்போன துப்பாக்கியொன்றையே குறித்த நபர் கொலைக்குப் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment