Tuesday, December 6, 2011

சிவில் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர் நேற்று மட்டக்களப்பு விஜயம்!

Tuesday, December 06, 2011
சிவில் பாதுகாப்பு பிரிவின் தேசிய பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித டி கொமசாரு நேற்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் பிரிவுகளுக்கும் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மக்கள் தொடர்பு அதிகாரிளைச்சந்தித்து சிவில் பாததுகாப்பு பொலிஸ் பொதுமக்கள் நல்லுறவு தொடர்பாக உயர்மட்ட மாநாட்டை நடாத்தினார்.

மட்டக்களப்பு மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் நவரட்ண திஸ்நாயக உட்பட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment