Pages

Wednesday, December 7, 2011

அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் மாத்திரமே இலங்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்-அமைச்சர் விமல்வீரவன்ச!

Wednesday,December,07,2011
இலங்கை: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக்கட்டியெ ழுப்புவதற்காக தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என சகலரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று காலை கல்லூரி அதிபர் திருமதி.வ.பரசுராமன் தலைமையில், கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, 2007, 2008,2009 ஆம் ஆண்டுகளில் கல்வி, கலை, மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சான்றிதழ்கள், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் மாத்திரமே இலங்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.

பிரிந்து வாழுகின்ற எண்ணம் எமது உள்ளங்களில் ஏற்படும்போது எம்மால் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க முடியாது என்பது உறுதி என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment