Pages

Thursday, December 8, 2011

வடமராட்சி பருத்தித்துறை மெற்றக் கடைச்சந்தியில் அதிகாலையில் 4 கடைகளில் தொடர் கொள்ளை!

Thursday,December,08,2011
இலங்கை: வடமராட்சி பருத்தித்துறை மெற்றக் கடைச்சந்தியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் 4 கடைகள் கொள்ளையர் களால் சூறையாடப்பட்டுள்ளது. இச்சம் பவத்தில் இரும்புக்கடை, மின்சார உபகரணம் விற்கும் கடை, தொலைபேசி விற்பனை நிலையம், புடைவையகம் ஆகிய நான்கு கடைகளிலிருந்து பொருட்கள் மற்றும் பணம் உட்பட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை சூறையாடப்பட்டுள்ளன.

மின் உபகரணக்கடையிலிருந்து 49 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான பொருட்களும், புடைவையகத்தில் 6 இலட் சத்து 20ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும், தொலைபேசி விற்பனை நிலையத்திலிருந்து 2 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் பணமும் இரும்புக் கடையில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட் களும்,8 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் பலத்த பாதுகாப்புச் சூழலில் இடம் பெற்றதனால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது தொடர்பாக பொலிசாரும் இராணுவத்தினரும் விசாரணை களை மேற்கொண்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment