Pages

Tuesday, November 22, 2011

புலம்பெயர் மக்கள் இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட வேண்டும் - கிறிஸ் நோனீஸ்!

Tuesday, November 22, 2011
புலம்பெயர் மக்கள் இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட வேண்டுமென பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் பிரித்தானியா வாழ் இலங்கையர்கள் பங்கெடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சில சக்திகளின் ஊடக பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடாது உண்மையை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானிய வாழ் இலங்கையர்கள் நேரில் சென்று நாட்டின் நிலைமைகளை புரிந்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment