Pages

Tuesday, November 1, 2011

கரந்தெனியவில் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது: பதற்றம் - விசேட அதிரடிப்படையினரால் நிலைமை கட்டுப்பாட்டில்!

Tuesday, November 01, 2011
COLOMBO: கரந்தெனிய பிரதேசத்திற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கரந்தெனியவில் அரச வைத்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று குற்றத் தடுப்புப் பிரிவினரால் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தனியார் வைத்திய நிலையம் ஒன்றை நடத்திச் சென்றுள்ளார்.

இன்றைய தினம் காலை குறித்த நபரின் வைத்திய நிலையம் மற்றும் வீட்டிற்குச் சென்ற கரந்தெனிய பிரதேசவாசிகள் அவற்றிற்கு தீ வைத்ததை அடுத்து அங்கு ஒருவகை பதற்ற நிலை காணப்பட்டது.

எனினும் அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment