Pages

Tuesday, November 22, 2011

வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறை 468.9 பில்லியன் ரூபா!

Tuesday, November 22, 2011
468.9 பில்லியன் ரூபாய் இவ்வருட வரவு -செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையாக அமைந்துள்ளது.

அரசாங்க செலவீனங்கள் சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காவே, இம்முறை அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு -செலவுத் திட்டத்தின் பிரகாரம் அடுத்த வருடத்தில் ஆயிரத்து நூற்று இருபத்து ஆறு தசம் ஒரு பில்லியன் ரூபாய் அரசாங்கத்தின் மொத்த வருமானமாக அமையவுள்ளது.

இதில் ஆயிரம் தசம் ஆறு பில்லியன் ரூபாவை வரி வருமானம் மூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்று நான்கு தசம் ஒன்பது பில்லியன் ரூபாய், அடுத்த வருடத்திற்கான அரசின் மொத்த செலவீனமாக அமையவுள்ளது.

இதன்பிரகாரம் பாதீட்டு பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக உள்நாட்டில் இருந்து இருநூற்று தொண்ணூற்று மூன்று தசம் ஆறு பில்லியன் ரூபாயும், வெளிநாடுகளிமிருந்து நூற்று எழுபத்து ஐந்து தசம் மூன்று பில்லியன் ரூபாயும் நிதியீட்டங்களாகப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு டொலர்களினால் நிரம்பி வழியும் குரோதமாக கருதப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் வரவு செலவுத் திட்ட உரையை செவிமடுக்க முடியாத இந்த ஜனநாயக விரோத செயல் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment