Pages

Saturday, November 26, 2011

இலங்கை தென் மாகாணத்தில் கடும் காற்று: 30 பேரை காணவில்லை!

Saturday, November 26, 2011
தென் மாகாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக இதுவரை 30 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது.

காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்

நேற்று முற்பகல் வீசிய கடும் காற்றினால் தென் மாகாணத்தில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த அனர்த்த நிலைமையினால் ஆயிரத்து 200ற்கும் அதிகமான வீடுகளுக்கு சேதம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்றைய தினத்திலும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது கடும் காற்று வீசுவதுடன் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்ளம் குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment