அக்காவுடன் ஒப்பிடுகிறார்கள்-நிஷா அகர்வால்!இஷ்டம்' படம் மூலம் அறிமுகமாகும் காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் கூறியது: காஜல் அகர்வால் தங்கை என்பதால் என்னை அவருடன் ஒப்பிடுகிறார்கள். அது வழக்கமானதுதான். ஒப்பிடுவதைவிட திரையுலகில் போட்டி முக்கியம். அது ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் இருக்க வேண்டும். தெலுங்கில் ‘ஏமன்டி ஈ வேலÕ படத்தின் ரீமேக்தான் ‘இஷ்டம்Õ தெலுங்கில் நல்ல பெயர் கிடைத்ததால் தமிழிலும் எனக்கு வாய்ப்பு வந்தது.
ஆனால் படத்தில் சில மாற்றங்கள் உள்ளன. முக்கியமாக கிளைமாக்ஸ் மாற்றப்பட்டிருக்கிறது. ஹீரோ விமல். எனக்கு தமிழ் தெரியாது என்றாலும் தமிழில் நடித்தது நல்ல அனுபவம். இதன் பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. பாடல் காட்சிகள் மட்டும் படமாக வேண்டும். இதற்கிடையில் தெலுங்கில் ‘சோலோ' படத்தில் நடிக்கிறேன். அதில் நானே டப்பிங் பேச உள்ளேன். விரைவில் தமிழிலும் டப்பிங் பேச தமிழ் கற்று வருகிறேன்.
=====================================================================================
தீபாவளிக்கு மோதும் விஜய், சூர்யா, தனுஷ் படங்கள்!தீபாவளிக்கு இன்னும் 26 நாட்களே உள்ளன. கோடம்பாக்கத்தில் பெரிய கதாநாயகர்கள் படங்களை தீபாவளி பண்டிகையில் ரிலீசுக்கு கொண்டு வர இரவு பகலாக விறுவிறுப்பான வேலைகள் நடக்கின்றன. விஜய்யின் வேலாயுதம் சூர்யாவின் 7-ஆம் அறிவு. தனுசின் மயக்கம் என்ன ஆகிய மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இப்படங்களுக்கான வியாபாரம் ஜரூராக நடக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள மெஜாரிட்டி தியேட்டர்களை இந்த மூன்று படங்களும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இதோடு பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் “ரா ஒன்” படத்தையும் தமிழில் டப்பிங் செய்து தீபாவளிக்கு வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. கடந்த 2007-ல் தீபாவளியன்று இது போல் விஜய்யின் அழகிய தமிழ் மகன், சூர்யாவின் வேல், தனுசின் பொல்லாதவன் படங்கள் மோதின.
அப்போது இருந்ததை விட இப்போது 3 நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் பெருகியுள்ளது. வியாபாரமும் உலக அளவில் விரிந்துள்ளது. எனவே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 7-ம் அறிவு படத்தில் சூரியா ஜோடியாக ஸ்ருதி, நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. சீனாவில் தற்காப்பு கலையை அறிமுகம் செய்த போதி தர்மர் என்ற தமிழரை பற்றிய கதையே இப்படம்.
வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஹன்சிகா, ஜெனிலியா என இரு ஜோடிகள் கிராமத்தில் பிறந்த சாதாரண இளைஞன் படிப்படியாக உயர்ந்து தலைவனாவதே கதை. ராஜா இயக்கியுள்ளார். மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடி ரிச்சா. செல்வராகவன் இயக்கியுள்ளார். இது அடுத்த தலைமுறைகதை என்று சுருக்கமாக சொன்னார் செல்வராகவன். 1 1
=====================================================================================
கமல்ஹாசன் படத்தை 100 தடவை பார்த்தவன் நான் - சாருஹாசன் பேச்சு!கமல்ஹாசனின் படத்தை யாராவது 100 தடவை பார்த்திருப்பார்களா... ஆனால் அவரது முதல் படத்தை தியேட்டர், தியேட்டராக போய், 100 தடவை பார்த்தேன், என்று நடிகர் சாருஹாசன் கூறினார்.
கமல்ஹாசன் கவுர வேடத்தில் நடித்த மலையாள படம், '4 ப்ரெண்ட்ஸ்.' இந்த படத்தில் அவருடன் ஜெயராம், ஜெயசூர்யா, மீராஜாஸ்மின் ஆகியோரும் நடித்துள்ளனர். சாஜி சுரேந்திரன் இயக்கியுள்ளார்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 4 நண்பர்களை பற்றிய படம். உயிருக்கு கெடு வைக்கப்பட்ட அந்த 4 பேர்களின் கவலைகளை போக்கி, உற்சாகமூட்டுகிற வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். படத்தில் நடித்ததற்காக அவர் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. சமூக கருத்துள்ள படம் என்பதால், இலவசமாகவே நடித்துக்கொடுத்தார்.
இந்த படத்தை, 'அன்புள்ள கமல்' என்ற பெயரில், தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார், பிரதீப். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடந்தது.
பாடல்களை, கமல்ஹாசனின் அண்ணன் நடிகர் சாருஹாசன் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:
"அன்புள்ள கமல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படவிழாவில் கலந்துகொள்ள எனக்கு அதிக உரிமை இருக்கிறது. கமல்ஹாசன் பிறப்பதற்கு முன்பே எனக்கு திருமணம் ஆகிவிட்டது.
யாராவது அவரது படத்தை 100 தடவை பார்த்தவர்கள் இருக்கிறீர்களா? நான் பார்த்து இருக்கிறேன். அது, கமல்ஹாசன் நடித்த முதல் படம், 'களத்தூர் கண்ணம்மா.'
கமல்ஹாசனை குழந்தையாக தூக்கிக்கொண்டு தியேட்டர், தியேட்டராக போனேன். எல்லா தியேட்டர்களிலும் அந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்டேன். என் தம்பியை முதன்முதலாக திரையில் பார்த்தபோது, ஆனந்த கண்ணீர் விட்டேன்.
அதுபோல் ஒரு படம் வெற்றி பெற்றால், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆனந்த கண்ணீர் வரவேண்டும்,'' என்றார்.
விழாவில், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் `கலைப்புலி' ஜி.சேகரன், நடிகர்கள் விதார்த், ரவிகாந்த், இசையமைப்பாளர் ஜான், பூண்டி மாதா கோவில் பங்கு தந்தை அகஸ்டின் பீட்டர், பட அதிபர் பிரதீப் ஆகியோர் பங்கேற்றனர்.
=====================================================================================
ரஜினியின் ராணா கைவிடப்படுமா? - கோலிவுட்டில் பரபரப்பு!இதோ அதோ என்று தள்ளிப் போடப்பட்டு வந்த ரஜினியின் ராணா படம் கைவிடப்படக்கூடும் என கோடம்பாக்கத்தில் பலமான வதந்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.
ராணா படம் துவங்கிய தினத்தன்றுதான் ரஜினியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஒரே ஒரு நாள் ஷூட்டிங் நடந்ததோடு சரி. அதன் பிறகு தொடர்ந்து மருத்துவமனை, சிகிச்சை, ஓய்வு என்று போகின்றன ரஜினியின் நாட்கள்.
ஆனாலும், சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணாவை மீண்டும் தொடர ஆர்வம் காட்டி வந்தார். அந்தப் படம் குறித்து தொடர் ஆலோசனைகள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினி இன்னும் 6 மாத காலத்துக்கு கண்டிப்பாக ஓய்வெடுத்தாக வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமார் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "இந்தப் படத்தை இப்போது தொடர முடியாத நிலை உள்ளது. எனவே இதை தள்ளிப் போட்டுவிட்டு, முத்து மாதிரி ஒரு லைட்டான படத்தை எடுக்கலாமா என ரஜினி சார் ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமாரும் ரஜினியும் ஆலோசனை நடத்தியது உண்மைதான்," என்றார்.
ஆனால் இதுபற்றி ரஜினியோ ரவிக்குமாரோ அல்லது தயாரிப்பாளரோ இதுவரை எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
=====================================================================================
சிம்பு ஜோடியானார் ஹன்சிகா!சென்னை : ‘வேட்டை மன்னன்’ படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி.
தமிழில், ‘மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’ படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளவர் ஹன்சிகா மோத்வானி. இப்போது ‘வேலாயுதம்‘ படத்தில் நடித்து வருகிறார். இவர் சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் இசை அமைக்கிறார்.
இதுபற்றி பட வட்டாரங்கள் கூறும்போது, ‘இது ஆக்ஷன் திரில்லர் படம். முழுவதும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப் படுகிறது. ஹாலிவுட் டெக்னீஷியன்கள் இதில் பணிபுரிய இருக்கிறார்கள். சிம்புவுடன் ஜெய்யும் நடிக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் தீக்ஷா சேத். இன்னொரு ஹீரோயினுக்கு இந்தி நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது ஹன்சிகா ஒப்பந்தமாகியிருக்கிறார்’ எனத் தெரிவித்தன.
=====================================================================================
பாடல் பாடுவதை நிறுத்தக்கூடாது-ஸ்ருதி முடிவு!இயக்கியிருக்கும் 7ம் அறிவு படத்தின் ஹீரோயினாக அறிமுகமாகிறார். பேட்டியின் போது சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு நான், முதன்முறையாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்குகிறேன். நிறைய எதிர்பார்ப்போடு என் நடிப்பை, தமிழ் ரசிகர்கள் திரையில் பார்க்க போறாங்கனு நினைக்கும் போது, கொஞ்சம் பதட்டமாகவும், அதேசமயம் ரொம்ப ஆவலாகவும் இருக்கிறது. எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி, உதவி செய்த டைரக்டர் முருகதாஸ் சார்க்கு இந்தநேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 6ம் நூற்றாண்டுக் கதையில் நானும் இருக்கேன் என நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. இந்த முதல்பட வாய்ப்பை நான் என்றுமே என் வாழ்வில் மறக்க மாட்டேன் என்றார். மேலும் பாடகியாக சினிமாவுலகில் நுழைந்த ஸ்ருதிஹாசன் எத்தனை படங்களில் நடித்தாலும் பாடல் பாடுவதை நிறுத்தக்கூடாது என முடிவு செய்திருக்கிறார்.
No comments:
Post a Comment