Tuesday, October 4, 2011

நல்லுறவை பேனும் நடவடிக்கைகளில் SCOTLAND YARD பொலிஸார்!

Tuesday, October 04, 2011
கிழக்கு மாகாணத்திலுள்ள பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நல்லுறவை பேனுவதற்கு விசேட பயிற்சிகளை வழங்குவதற்கு SCOTLAND YARD பொலிஸார் முன்வந்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் ஏற்பாட்டில் இந்த விசேட பயிற்சிகள் இந்த மாவட்டத்தின் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த விசேட பயிற்சித் திட்டத்தின் ஊடாக பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறந்த நல்லுறவை பேணுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

SCOTLAND YARD பொலிஸாரின் விசேட பயிற்சித் திட்டத்தின் முதற்கட்டமாக இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொலிஸ் அதிகாரிகளை தெளிவூட்டும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தத் தெளிவூட்டல் நிகழ்வு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்துவதற்கு அவசியமான வழிமுறைகள் SCOTLAND YARD பொலிஸ் நிபுணர்களால் தெளிவூட்டப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment