Tuesday, October 04, 2011பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு அரசாங்கத்தின் கவனயீனமே காரணமென பல்கலைக்கழக தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.
இந்த நிலைமையினால் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
உறுதியளித்தவாறு இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தமது பிரச்சினைகள் தீர்க்கப்படாத பட்சத்தில் தாம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி மஹீம் மெண்டீஸ் தெரிவிக்கின்றார்.
அரசாங்கம் கல்விசார ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு ஒருமாத கால அவகாசம் கோரியுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவர் ஆர்.எம்.சந்திரபால குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் சம்பள பிரச்சினைக்கு தீர்வொன்று எட்டப்படாத பட்சத்தில் தாம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுப்பதாகவும் அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதேவேளை பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகள் காணப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க நியூஸ்பெஸ்டுக்குத் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் காணப்படும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படுவதாகவும் சம்பளம் உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தாம் விரைவில் தீர்வொன்றை வழங்குவதாகவும் உயர்கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment