Pages

Tuesday, October 4, 2011

திருச்சி சிறையில் மரத்தில் கைதிகள் ஏறி தற்கொலை மிரட்டல்!.

Tuesday, October 04, 2011
திருச்சி: மரத்தில் கைதிகள் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் திருச்சி சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ‘குண்டாஸ்’ கைதிகளுக்கான டிவிடிஏ 1வது தொகுதியில் 40க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சிறை ஜெயிலர் செந்தாமரை கண்ணன் மற்றும் போலீசார் 6 மற்றும் 7ம் பிளாக் மற்றும் டிபிடிஏ பிளாக்கிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். இதற்கு கைதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் கைதிகளை தாக்கியதில் மதன் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதை கண்டித்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், நீதி விசாரணைகோரியும் கைதிகள் அனைவரும் மத்திய சிறையின் உள்புற மெயின் கேட் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் 15 கைதிகள் சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment