Pages

Friday, October 7, 2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தண்டனை வழங்க வேண்டுமென்பதில் சில மேற்குலக நாடுகள் முனைப்பு-சுசில் பிரேமஜயந்த!

Friday, October 07, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தண்டனை வழங்க வேண்டுமென்பதில் சில மேற்குலக நாடுகள் முனைப்பு காட்டி வருவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உள்ளக சக்திகளினால் ஜனாதிபதிக்கு எதுவித அழுத்தங்களும் கிடையாது எனவும், வெளிச் சக்திகளே ஜனாதிபதியின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சில வலுவான மேற்குலக நாடுகள், புலி ஆதரவாளர்கள் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியன இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீவிர முனைப்பு காட்டி வருகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் தோற்கடிக்கப்பட்டமையை தாங்கிக் கொள்ள முடியாத சக்திகள் இவ்வாறு ஜனாதிபதியை இலக்கு வைத்து போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டே பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment