Pages

Saturday, October 29, 2011

ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய இரண்டு பாகிஸ்தான் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Saturday, October 29, 2011
3.3 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடலுக்குள் மறைத்து வைத்து கடத்திச் சென்ற இரண்டு பாகிஸ்தான் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 10 மில்லியன் என காவற்றையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, கராச்சியில் இருந்து இலங்கை சென்ற இந்த பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட பெண்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் விழுங்கி உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பெண்களையும் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment