Pages

Friday, October 7, 2011

நாளை மறுதினம் ரஜினி வீட்டுக்கு வருகிறார் ஷாருக்கான்!.

Friday, October 07, 2011
மும்பை: ரஜினி வீட்டுக்கு நாளை மறுதினம் வரும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ‘ரா ஒன்‘ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததற்காக நேரில் நன்றி தெரிவிக்கிறார். இதுபற்றி ஷாருக்கான் கூறியதாவது: சென்னையில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி காண 9ம் தேதி (ஞாயிறு) வருகிறேன். அன்று ரஜினி வீட்டுக்கு சென்று அவரை சந்திப்பேன். எனது வேண்டுகோளை ஏற்று, ‘ரா ஒன்Õ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார்.

அவரை மும்பைக்கு அழைத்து வந்ததில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே எடிட்டிங் செய்து அதை ரஜினி சாரிடம் ஒப்புதல் பெற்றுத் தரும் வரை அவரது மகள் சவுந்தர்யா உதவி செய்தார். சிறு வயதிலிருந்தே ரஜினி, கமலின் ரசிகன் நான். ‘ஹே ராம்‘ படத்தில் கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரா ஒன்Õல் ரஜினியுடன் நடித்தேன். நான் சிறுவனாக இருக்கும் போதே இவர்கள் இருவரை பற்றியும் எனது அம்மா என்னிடம் நிறைய தகவல்கள் சொல்வார். அது என் மனதில் பதிந்திருக்கிறது. மம்மூட்டி, மோகன்லால் நடிப்பும் என்னை கவர்ந்தது.

No comments:

Post a Comment