Pages

Wednesday, October 5, 2011

தலைமைத்துவத்தை பாதுகாக்க ரணில் நடவடிக்கை!

Wednesday, October 05, 2011
அரசாங்கத்திற்கு பாடம் ஒன்றை புகட்ட அதிகாரம் வழங்குமாறு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கோட்டை, நடைபாதை வர்த்தகர்களுடன் இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வறிய மக்களை பாதுகாக்கும் ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைபாதை மற்றும் மீன் வர்த்தர்களை பாதுகாத்தது தமது கட்சியே என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமது தலைமைத்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக தேர்தல்களில், பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மைத்திரிபால சிரிசேன இதனை தெரிவித்துள்ளார்.

சிதறிபோயுள்ள எதிர்கட்சியை ஒன்றிணைக்க ரணில் விக்ரமசிங்ஹ முனைவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தலில், அரசாங்கம் பாரிய வெற்றியைப் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் திஸ்ச அத்தநாயக்க, சுதந்திரமானதும் சுமூகமானதுமான தேர்தல் ஒன்றை நடத்த அனைவரும் பொறுப்புடன் செயல்படுமாறும் கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment