Pages

Wednesday, October 5, 2011

நெருக்கடி குறித்து ஜே.வி.பி ஆராய்வு!

Wednesday, October 05, 2011
புதிய அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிப்பது குறித்து இதுவரை தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவில்லை என ஜே.வி.பி.யிலிருந்து விலகிய மாற்றுகொள்கைக் குழு தெரிவித்துள்ளார்.
அந்த குழுவின் உறுப்பினரான மேல்மாகாணசபை உறுப்பினர் தீப்தி ராஜபக்ஷ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மாற்றுக்கொள்கைக்குழு புதிய கட்சியொன்றை ஸ்தாபிக்கப் போவதாக பிற ஊடகங்களில் இன்று வெளியான செய்தி தொடர்பில் எமது செய்திச் சேவை அவரிடம் வினவியிருந்தது.

அதற்கு பதிலளித்த அவர், முழுமையான பல்சமூக இடதுசாரி கட்சியொன்றை ஸ்தாபிப்பதே தமக்கு அவசியமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்பொருட்டு நாடளாவிய ரீதியாக விசேட கருத்தரங்குகளை மேற்கொண்டு வருவதாக மாற்றுகொள்கைக் குழு உறுப்பினர் தெரிவித்தார்

இதேவேளை, ஜே.வி.பியினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்சியின் இறுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் மாற்றுக்கொள்கைக் குழுவினர் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும். குறித்த பிரதான பிரசார கூட்டத்தில் கட்சித் தலைவர் சோமவங்ச அமரசிங்க உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment