Pages

Sunday, October 2, 2011

அரசு - கூட்டமைப்பு பேச்சு வார்தை நாளை?.

Sunday, ctober 02, 2011
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமான மேலும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நாளைய தினம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விடையம் தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பு தரப்பினர் எமது செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தியிருந்தனர்.

எப்படியிருப்பினும் நாளை இடம்பெற உள்ள 11 வது சுற்று பேச்சுவார்தைகள் சிலவேளைகளில் பிற்போட வேண்டிய சூழ்நிலை இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சற்று முன்னர் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகளில் அரசாங்க உயர்மட்டத்தினார் ஈடுப்பட்டு வருவதனாலேயே நாளைய பேச்சுவார்த்தை தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment