Tuesday, October 4, 2011

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற் பகுதியில் நிர்வாண நிலையில் கரையொதுங்கிய சடலம்!

Tuesday, October 04, 2011
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரங்கனே - தம்பாடி கடற்கரையில் இன்று காலை 11 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் ஆடைகள் அற்ற நிலையில் கரையொதுங்கியுள்ளதென ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 40 வயதுடைய ஆண் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சடலம் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

சடலத்தை பிரேத பரிசோதனைக்கென யாழ். வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துள்ள ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment