Pages

Sunday, October 2, 2011

இன்று காந்தி ஜெயந்தி : டெல்லி ராஜ்காட் சமாதியில் பிரதமர், சோனியா மரியாதை!

Sunday, October 02, 2011
புதுடெல்லி : காந்தியடிகளின் 142வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது சமாதியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ தலைவர் அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இன்று காலையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இவர்களுடன் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

சோனியா காந்திக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்து, கடந்த மாதம் 8ம் தேதி டெல்லி திரும்பினார். அதன்பிறகு கட்சிக் கூட்டங்களில் சோனியா கலந்துகொண்டாலும் பொது இடத்துக்கு வருவது இதுவே முதல்முறை. அவர் அங்கு 20 நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை முடிந்தபிறகு, சோனியாவை அத்வானி சந்தித்து நலம் விசாரித்தார். காந்தி ஜெயந்தியையொட்டி, நாட்டு மக்கள் அனைவரும் வன்முறை ஒழிவதற்காக ஒரு நிமிடம் மவுனம் அனுசரிக்க வேண்டும் என்று காந்தியின் பேத்தி தாரா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment