Pages

Monday, October 3, 2011

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி மீன்கள், கருவி பறிப்பு!




Monday, October 03, 2011
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த குணசேகரன், ராஜமாணிக்கம், செந்தில், பழனி, உதயகுமார் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான பைபர் படகுகளில் கடந்த 30ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களது படகுகளில் மொத்தம் 15 பேர் இருந்தனர். 1ம் தேதி மாலை இந்திய கடல் எல்லையில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்கள் 3 படகுகளில் அங்கு வந்தனர். அவர்கள் வேகமாக வந்து குணசேகரன் படகில் மோதினர். இதில் அவரது படகின் ஒரு பகுதி சேதமடைந்தது.

பின்னர் இலங்கை படகுகளில் இருந்த மீனவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளில் குதித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் வைத்திருந்த மீன்களை அள்ளி தங்கள் படகுகளில் வைத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து படகில் இருந்த திசைகாட்டும் கருவி, டார்ச்லைட், சிக்னல் லைட் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு தாக்கினர்.

5 படகுகளில் இருந்தும் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களையும், மற்றும் கருவிகளையும் இலங்கை மீனவர்கள் பறித்துக்கொண்டனர். மீன்களை பறிகொடுத்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் கரை திரும்பிய மீனவர்கள் இன்று இந்த சம்பவம் குறித்து சக மீனவர்களிடம் தெரிவித்தனர். இதனால் வேதாரண்யம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த மாதம் மட்டும் தமிழக மீனவர்கள் மீது 5 முறை இலங்கை மீனவர்களும், ஒரு முறை கப்பல் படையினரும் தாக்குதல் நடத்தினர்

No comments:

Post a Comment