Pages

Monday, October 3, 2011

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட ஆயிலியடி மற்றும் மணியரசன் குளம் கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மினி சூறாவளி!

Monday, October 03, 2011
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட ஆயிலியடி மற்றும் மணியரசன் குளம் கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மினி சூறாவளியால் 42 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் 7 தற்காலிக வீடுகள் முழுமையாகச் சேதமடைந்ததுடன், 35 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக் தினகரனுக்குத் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணி முதல் 3.15 மணி வரையான நேரத்திலேயே இந்த மினிசூறாவளி தாக்குதல் ஏற்பட்டது. வீடுகளை இழந்த வர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகத் தெரிவித்த கிண்ணியா பிரதேச செயலாளர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்த மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளை சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகத்தின் உதவி யினூடாக புனரமைப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ளவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இதனையடுத்து கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ் ஸ்தலத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதோடு நஷ்டஈடுகளை வழங்குமாறும் பணித்தார்.

No comments:

Post a Comment