Pages

Tuesday, October 11, 2011

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது

Tuesday, October 11, 2011
தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நோர்வேக்கு விஜயம் செய்திருந்ததாகவும், அதன் போது எரிக் சொலஹெய்மை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நோர்வே அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சிப் பேரவை அறிக்கை உள்ளிட்ட ஐந்து ஆவணங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment