Pages

Sunday, October 9, 2011

வன்முறையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை – காவற்துறை!

Sunday, October 09, 2011
தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் காமினி நவரட்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களில், பாதுகாப்பை வழங்குவதற்காக காவற்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இயல்பற்ற சூழ்நிலைகள் ஏற்படுமாயின், காவற்துறையினருக்கு மேலதிகமாக ராணுவத்தினர் மற்றம் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் பிரதி காவற்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment