Monday, October 3, 2011

காஸ்ட்லி டைவர்ஸ்.. ரூ.416 கோடி!.

Monday, October 03, 2011
ஈரானை சேர்ந்த பாரம்பரிய இமாம் குடும்பத்தினருக்கு ‘அகா கான்’ என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பட்டத்தில் இருப்பவர் ஷா கரீம் அல் உசேனி (74). 49-வது அகா கான். சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். பல தொழில்கள் செய்து வருபவர். ரூ.46 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். எல்லா கண்டங்களிலும் பங்களா வைத்திருக்கிறார். 600 ரேஸ்கோர்ஸ் மைதானங்கள் வைத்துள்ளார். பிரபல மாடல் அழகி சாரா சலியை 1969-ல் திருமணம் செய்தார்.

25 ஆண்டுகளில் 3 பிள்ளைகள் பிறந்தன. 1995-ல் அவரை டைவர்ஸ் செய்துவிட்டு ஜெர்மனியை சேர்ந்த பாப் பாடகி பேகம் இனாராவை (52) 1998-ல் பிரான்சில் உள்ள தனது எய்ஜில்மன்ட் எஸ்டேட்டில் 2-வது திருமணம் செய்தார். டைவர்ஸ் பெறப்போவதாக இருவரும் 2004-ல் அறிவித்தனர்.

பிரான்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இனாராவுக்கு ரூ.80 கோடி ஜீவனாம்சம் கொடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இனாரா அப்பீல் செய்தார். மேல் கோர்ட் விசாரித்து ரூ.416 கோடி கொடுக்க தற்போது உத்தரவிட்டுள்ளது. இது பிரான்சின் ‘காஸ்ட்லி விவாகரத்து’ என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment