Tuesday, October 4, 2011

மும்பையில் 3 மணி நேரம் ஷூட்டிங் ‘ரா ஒன்’ படத்தில் நடித்தார் ரஜினி!

Tuesday, October 04, 2011
சென்னை:ஷாருக்கான் நடிக்கும் ‘ரா ஒன்’ என்ற இந்தி படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சி, மும்பையில் படமானது. மூன்று மணி நேரம் ரஜினிகாந்த் நடித்தார்.
ரஜினி நடிப்பில் ‘ராணாÕ பட தொடக்க விழா கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி நடந்தது. பூஜையில் பங்கேற்ற ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். இப்போது பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ‘ரா ஒன்Õ படத்தில் ரஜினி நடிப்பார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘Ôரஜினியின் ஆசியுடன் Ôரா ஒன்Õ பட ஷூட்டிங் இன்று முடிந்தது. கண்ணீருடன் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பிரார்த்தனையும் குடும்பத்தாரின் அன்புமே அவரை குணம் அடைய வைத்திருக்கிறது. எங்கள் படம் உங்களால் (ரஜினியால்) நிறைவடைந்ததுÕÕ என்று குறிப்பிட்டுள்ளார். ‘ரா ஒன்’ படத்தில் ரஜினி ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளார். அந்த காட்சி நேற்று முன்தினம் படமானதையும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிக்கும் காட்சிக்கான ஷூட்டிங், முதலில் ஐதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் மும்பைக்கு மாற்றப்பட்டது. 4ம் தேதி நடத்த முடிவு செய்திருந்த ஷூட்டிங், ரஜினியின் விருப்பத்துக்கு ஏற்ப காந்தி ஜெயந்தி தினமான நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. 3 மணி நேரம் இதற்கான ஷூட்டிங் நடைபெற்றது. அவ்வப்போது இடைவெளி விட்டு ஷாருக்கானுடன் ரஜினி நடித்த காட்சிகளை படமாக்கினர். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

No comments:

Post a Comment