Tuesday, October 4, 2011

தேர்தல் விதிமுறை மீறல்: வைகோ மீது 2 வழக்கு; மதுரை மேயர் வேட்பாளர் பாஸ்கர சேதுபதி மீதும் வழக்கு பதிவு!

Tuesday, October 04, 2011
மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு ம.தி.மு.க. சார்பில் பாஸ்கர சேதுபதி போட்டியிடுகிறார். இவர் மாநகராட்சி முழுவதும் நிர்வாகிகளுடன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். பேச்சியம்மன் படித்துரை, பைகரா ஆகிய இடங்களில் பாஸ்கர சேதுபதியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் வைகோவின் வாகனத்திற்கு பின்னால் அதிக வாகனங்கள் சென்றதாக ஆண்டாள்புரம், திலகர் திடல் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வைகோ, மேயர் வேட்பாளர் பாஸ்கர சேதுபதி, மாவட்ட செயலாளர் பூமிநாதன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அண்ணாநகர் பகுதியில் பாஸ்கர சேதுபதி பிரசாரம் செய்தார். அங்கு அவர் தேர்தல் விதிமுறையை மீறியதாக அவர் மீதும், மாவட்ட செயலாளர் பூமிநாதன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment